இராஜபாளையம்: ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

1984பார்த்தது
ராஜபாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது மோசடி செய்து ரூ. 1.15 லட்சம் திருடியதாக வேலூரைச் சேர்ந்த கார்த்திக் (27), பார்த்திபன் (24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ரமேஷ் (57) என்பவர் ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்றபோது, உதவியது போல் நடித்து அவரது கார்டை மாற்றி, ரூ. 40,000 பணம் எடுத்ததுடன், மேலும் ரூ. 75,000-க்கு பொருட்கள் வாங்கியுள்ளனர். ரமேஷ் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், இருவரையும் கைது செய்து, வாகனத்தையும் கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி