விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மாவரசி அம்மன் கோவில், முள்ளிக்கடவு, மலட்டாறு வழியாக அய்யனார் கோவில் ஆற்றில் சங்கமிக்கும் நீர், தடுப்பணை மூலம் சேகரிக்கப்படுகிறது. இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. 18 அடி கொள்ளளவு நிரம்பியதால், தற்போது ஆறுகளில் இருந்து நேரடியாக நீர் எடுக்கப்பட்டு குளோரின் மூலம் சுத்திகரித்து விநியோகிக்கப்படுகிறது. புதிய நீர் தேக்கத்திலும் தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது. விநியோகம் முடிந்ததும் அங்கிருந்தும் தண்ணீர் வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.