கோவில் காவலாளிகள் இருவர் படுகொலை - காவல்துறையினர் விசாரணை*

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி திருக்கோவிலில் இரவு நேர காவலாளிகளாக பணியாற்றி வந்த பேச்ச முத்து மற்றும் சங்கர பாண்டியன் ஆகியோர் இன்று காலை பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கோவில் நிர்வாகத்தினர் கோவிலைத் திறந்து பார்த்தபோது இந்த துயர சம்பவம் தெரியவந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, காவலாளிகள் அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.