இராசபாளையம் - Rajapalayam

ஶ்ரீவி: நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பிப்ரவரி 16 அன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை வீசியுள்ளார். வழக்கறிஞர் அமரும் இடத்தில் அரிவாள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த டி.எஸ்.பி. பாலசுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
சிவகாசி: விஷமருந்தி பட்டாசு தொழிலாளி தற்கொலை....
Feb 17, 2026, 03:02 IST/சிவகாசி
சிவகாசி

சிவகாசி: விஷமருந்தி பட்டாசு தொழிலாளி தற்கொலை....

Feb 17, 2026, 03:02 IST
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் செல்வகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி முனியப்பன் (50) மயில் துத்தம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இவர், கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். சம்பவம் அன்று வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.