
அருப்புக்கோட்டை: சாலை விபத்தில் இரு முருக பக்தர்கள் பலி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி விலக்கில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த முருக பக்தர்கள் மீது கார் மோதியதில், காரியாபட்டி அருகே கழுவனச்சேரியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் சடையகருப்பன்(35) மற்றும் முத்துப்பாண்டி(35) என்ற இரண்டு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


























