சாத்தூர்: வீட்டின் மேற்கூரை இடிந்து 93 வயது மூதாட்டி காயம்

1814பார்த்தது
சாத்தூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே வசிக்கும் 93 வயது பிரேமா, தனது வீட்டில் முதல் மாடியில் இருந்து தரைத்தளத்தில் விழுந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளார். இரண்டு நாட்களாக காணாமல் போன அவரை அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து, காவல்துறை உதவியுடன் வீட்டை உடைத்து பார்த்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. காயமடைந்த அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி