விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் அருகே சத்திரப்பட்டி, ஓ. மேட்டுப்பட்டி, சடையம்பட்டி, சின்னக்கொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலாகடற்கரைராஜ் கலந்துகொண்டார். சாத்தூர் அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தனியார் திருமண மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ் தலைமை தாங்கினார். சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து இருப்பிட சான்று, வாரிசு சான்று, சாதி சான்று, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முகாமில், சத்திரப்பட்டி, ஓ. மேட்டுப்பட்டி, சடையம்பட்டி, சின்னக்கொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி பகுதிகளில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினார்கள். இதில், வட்டாட்சியர் லோகநாதன், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மகேஸ்வரன், காமேஸ்வரி, திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.