சாத்தூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த பள்ளி வாகனம்

1166பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் இயங்கி வரும் இந்து நாடார் மகிமை பள்ளியின் 4 வாகனங்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பிறகு வழக்கம்போல் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பேருந்து முற்றிலும் எரிந்தாலும், அருகிலிருந்த மற்ற வாகனங்கள் காப்பாற்றப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி