விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பைபாஸ் ரோட்டில் தாயில்பட்டி ஜங்ஷன் அருகே இன்று இரவு 10:30 மணி அளவில் டீக்கடைக்குள் கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. இந்த விபத்தில் அருகிலிருந்த மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், அக்கடை அருகே நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி லாரி நின்றது. விபத்து குறித்து சாத்தூர் டவுன் காவல் நிலைய காவலர்கள் நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.