தேநீர் கடை மீது மோதி விபத்து ஏற்படுத்தி கண்டைனர் லாரி

5பார்த்தது
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஜாஹீது அன்சாரி (31), மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு புதிய கார்களை ஏற்றிச் சென்றபோது, சாத்தூரில் உள்ள படந்தால் சந்திப்பில் சாலையோரம் இருந்த டீக்கடை மீது லாரியை மோதி விபத்தை ஏற்படுத்தினார். அதிக மதுபோதையில் இருந்த ஓட்டுநர், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய லாரி மீட்கப்பட்டு, ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பொருட்களை உடைத்து, நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டீக்கடைக்கு வெளியே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி