தாயில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக மழை இல்லாததால் கிணற்று நீர்மட்டம் குறைந்து, குறைந்த தண்ணீரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. மார்கழி மாதம் முதல் அறுவடை தொடங்கியபோது கிலோ 45-60 ரூபாய் வரை விலை கிடைத்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் தை மாதம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் குறைந்தாலும், சிவகாசி, சங்கரன்கோவில் சந்தைகளில் தக்காளி விலை கிலோ 10 ரூபாயாக குறைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர்.