கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

874பார்த்தது
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 17.2.2026 அன்று முற்பகல் 11 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர்கள் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் மற்றும் தனிநபர் தொடர்பான மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா அறிவுறுத்தியுள்ளார். மேலும், வட்டார அளவிலான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும், நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவும் அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.