விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் வெம்பக் கோட்டை ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தாயில்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மண்குண்டாம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், மண்குண்டாம்பட்டி அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் வீணாகச் செல்கிறது. இந்த உடைப்பை உடனடியாகச் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.