விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே விஷம் குடித்து டிரைவர் எட்வின் இருதயராஜ் (27) உயிரிழந்தார். பெற்றோர் எதிர்த்த திருமணத்தால் மனவேதனை அடைந்த இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.