விருதுநகர் 4 ஆவது புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் விருதுநகர் வென்ச்சர் நெஸ்ட் இணைந்து, விருதுநகர் தொழில் முனைவு புத்தாக்க சிந்தனை போட்டி திருவிழா 2025 நடத்தப்படவுள்ளது. இதன் நோக்கம், விருதுநகர் மாவட்ட மாணவர்கள் மற்றும் தொடக்கநிலை சமூகத்தினரிடமிருந்து புதுமையான யோசனைகளை அடையாளம் கண்டு, ஊக்குவித்து, வளர்ப்பதாகும். இந்த போட்டி திருவிழா, புத்தாக்க சிந்தனைகளுக்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கும்.