விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2026 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப. அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் அளிக்குமாறும், வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் விவாதிக்கப்படும் என்றும், கூட்டத்தினை சிறந்த முறையில் நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.