விருதுநகர்: கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்புத்துறை

1088பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முதன்மை சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் மற்றும் கழிவுநீர் வாறுகால்களில் மூடிகள் போடப்படாததால், ஒரு பசுமாடு தவறி விழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இது போன்ற அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்க வாறுகால்களை முழுமையாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி