விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடுமையான வெயில் தாக்கத்திற்குப் பிறகு, இன்று மாலை திடீரென வெப்பச்சலன மழை தொடங்கியது. சில மணி நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்ததால், சாலைகள் மற்றும் தெருக்கள் வீதியெங்கும் மழைநீர் தேங்கி தெப்பக்குளம் போல் காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.