விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சிப்பி பாறை, மைபாறை பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும், 40க்கும் மேற்பட்ட மரங்களும் சாலை மற்றும் தெருக்களில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் இப்பகுதி எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.