தியாகி இமானுவேல் சேகரன் சிலை திறப்பு

54பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோல்வார்பட்டியில் மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மணி மண்டபம் அமைத்து, முழு உருவ வெங்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில கழக அமைப்புச் செயலாளர் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இமானுவேல் சேகரனார் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அவருடன் அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.