விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில், தமிழ்நாடு அரசு உள்ளாட்சி சட்ட திருத்தத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இஸ்லாமியர்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மத வழிபாடு மற்றும் மத அடையாள உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நூறு ஆண்டுகள் பழமையான சிதைந்த நிலையில் இருக்கும் வக்ஃப் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 1992 வழிபாட்டு தளங்களின் பாதுகாப்பு சட்டத்தை பாதுகாக்கவும், மேலும் வலுப்படுத்தவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையும் நீண்ட நாள் விடுப்பையும் உறுதி செய்ய வேண்டும், வஃபு சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பட்டாளியன் பிரிவு அமைக்க வேண்டும் உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.