விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக் கோட்டையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.