சாத்தூர் சமய கருப்பசாமி கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம்

1பார்த்தது
சாத்தூர் சேதுராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள சமய கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பணி வேலைகள் நிறைவடைந்த நிலையில், மகா கணபதி ஹோமம், யாக பூஜைகள், விமான கலசத்திற்கும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சமய கருப்பசாமிக்கு 16 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.