விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சார்பு ஆய்வாளர் செண்பக வேலன் இவர் மேலகோதை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது கருப்பசாமி என்பவர் அரசு அனுமதியும் உரிமம் இல்லாமல் எளிதில் தீப்பற்றி கூடிய வெடிவிபத்து ஏற்படும் என தெரிந்தும் வெடிகளை வைத்திருந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 6 கிலோ கொண்ட உதிரி பிஜிலி வெடிகள் அடங்கிய மூன்று அட்டைப்பெட்டிகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.