கபடி போட்டியில் வெற்றி அமைச்சர் பரிசுகள் வழங்கினார்

4பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமிர்பாளையத்தில், விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ரமேஷ் ஏற்பாட்டில் மாபெரும் கபடிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி, போட்டிகளைக் கண்டு ரசித்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி