விருதுநகர் மாவட்டம் மேட்டமலை பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் சாத்தூர் இந்தியன் வங்கியில் தனது வங்கிக் கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து அதில் தான் அடகு வைத்திருந்த நகைக்கு 36 ஆயிரத்தை வங்கியில் செலுத்தி விட்டு மீதமுள்ள ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மற்றும் இந்தியன் வங்கி அக்கவுண்ட் புக், உழவர் அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்க பவுச்சில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து சத்யா ஏஜென்சி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்து விட்டு இரு சக்கர வாகனத்தை பார்த்த பொழுது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை அடுத்து தனது காணாமல் போன பணம், அக்கவுண்ட் பாஸ்புக், உழவர் அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை கண்டுபிடித்து தர கூறி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.