சாத்தூர் அருகே நடுச்சூரங்குடி கிராமத்தில் கிணற்றில் தாய் மாரீஸ்வரி (25) மற்றும் மகள் சிவப்பிரியா (3) உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாரீஸ்வரியின் தாயார் கணேஷ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.