விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேப்பிலைபட்டி, மணியம்பட்டி கிராமங்களில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெறும் கட்சி மாநில மாநாட்டிற்கு பெண்கள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தேர்தலின் போது வாக்குக்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க கூடாது என்றும் பொதுமக்களிடம் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.