விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் இருந்து குகன்பாரை பகுதிக்கு பொதுமக்கள் எளிதாக சென்று வர, தரைப்பாலத்திற்கு பதிலாக உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் நேரில் சென்று பாலத்தை ஆய்வு செய்தனர்.