கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

591பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆலங்குளம் அருகே லட்சுமிபுரம் கிராம மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அரசு அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், கிராம சபை புறக்கணிப்பு, வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல் போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

தொடர்புடைய செய்தி