விருதுநகர் மாவட்டம் மேட்டமலை பகுதியில் சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எட்டூர்வட்டம், குமாரலிங்கபுரம் போன்ற பகுதிகளில் இருந்து சாத்தூர்-சிவகாசி மெயின் ரோடுக்கு வரும் வழியில் எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள், இரவு நேரங்களில் வாகனங்கள் தெரிய மின் விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.