விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நடைபெற்றது. இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 12 பயனாளிகளுக்கு நிதி இலவச வீட்டுமனைப்பட்டா ரூ. 6,21,608/- மதிப்பிலும், 1 பயனாளிக்கு நிதி வீட்டுமனைப்பட்டா ரூ. 13,500/- மதிப்பிலும், 38 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும்.
இ-பட்டா ரூ. 24,62,400/- மதிப்பிலும், உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில், 41 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், கால்நடைத்துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தாது உப்புக் கலவையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு விதைப்பைகளையும் என மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ. 30.98 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், வழங்கினார்.