ராஜகாளியம்மன் கோவில் விழா நடைபெற்றது

614பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்காபுரம் கிராமத்தில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பணி வேலைகள் நிறைவடைந்த நிலையில், யாக பூஜைகள், கணபதி ஹோமம், பால்குட ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. தாமிரபரணி மற்றும் வைப்பாற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் விமான கலசம், ராஜகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 21 வகையான அபிஷேகப் பொருட்களால் ராஜகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பணி குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி