சேதமடைந்த காவலர் குடியிருப்பை சீர் அமைக்க கோரிக்கை

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கான குடியிருப்பு வீடுகள், ஆற்று பாலம் அருகில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களுக்கு என தனித்தனி வீடுகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், குடியிருப்புகள் தொடர்ந்து பராமரிக்கப்படாததால், கட்டிடத்தின் பூச்சுகள் சிதைந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சேதமடைந்த காவலர் குடியிருப்பு பகுதிகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.