விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையப்பட்டி ஊராட்சி கோவிலூர் கிராமத்தில், மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதை தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்வதில் கிராம மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுகுறித்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பாதையை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.