விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குருநாதன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினார். இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொதிகள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்களிடமிருந்து புகையிலைப் பொதிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஞானசுந்தரி (வயது 50) அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.