சாத்தூர்: நெல்லை-புருலியா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்.

0பார்த்தது
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பயணிகளின் வசதிக்காக நெல்லை-மேற்குவங்க மாநிலம் புருலியா இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22606) அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் இலகுரக பெட்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படும். அதே போல, புருலியாவில் இருந்து சாத்தூர் வழியாக நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22605) அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி முதல் இலகுரக பெட்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.

தொடர்புடைய செய்தி