விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (நவம்பர் 18) காலை முதல் பெய்த சாரல் மழையால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், பட்டாசு உற்பத்தி தடைபட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.