சாத்தூர்: சாதனை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

63பார்த்தது
சாத்தூர்: சாதனை மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சாதனை புரிந்த பள்ளி மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியும், பட்டாசு ஆலை கூலித்தொழிலாளரின் மகளுமான செல்வி யோகேஸ்வரி, ஐஐடி மும்பையில் Aerospace Engineering படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். மேலும் தேர்வில் வெற்றி பெற்ற சாதனை படைத்த மாணவியை அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இ.ஆ.ப., விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 5000 வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி