சாத்துார்: நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா

56பார்த்தது
சாத்துார்: நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் முன்பு வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு அலுவலர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். இந்த விழாவிற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துமகாராஜா, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் (பொறுப்பு) அமலநாதகமலக் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

வழக்கறிஞர் சங்க தலைவர் மாரிமுத்து, செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலையில், பாரம்பரிய முறைப்படி கரும்பு பந்தல் அமைத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தமிழக பண்பாட்டுப் படி பொங்கல் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள், குமாஸ்தாக்கள், நீதிமன்றவளாக பாதுகாப்பணி போலீசார் உள்பட பலரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி