சாத்தூர்-நென்மேனி சாலையின் வழியாக விளாத்திகுளம், மாசார்பட்டி, கோட்டூர் மற்றும் இருக்கன்குடிக்கு தினசரி அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில்வேகேட் முதல் நென்மேனி வரை சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறையினர் சாத்தூர்-இருக்கன்குடி வரை பழுதடைந்த சாலையை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.