விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடி சாலையில் கோவேறு கழுதைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த கழுதைகள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். சாலைகளில் சுற்றித் திரியும் கோவேறு கழுதைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.