விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை போலீஸார் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக சோதனை நடத்தினர். அம்பேத்கர் காலனி பகுதியில் பாண்டி (36) என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். சட்டவிரோதமாக கள்ளவெடி, கள்ளத்திரி தயார் செய்யப்படுகிறதா என்றும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.