சாத்தூர்: வாலிபர் மீது போக்சோ வழக்கு...

1பார்த்தது
சாத்தூர்: வாலிபர் மீது போக்சோ வழக்கு...
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் தூக்கிச் சென்றார். இதைப் பார்த்தவர்கள் கதவைத் தட்டியதும், அவர் சிறுமியை வெளியே அனுப்பிவிட்டுத் தப்பியோடினார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி