விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (25) மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், மே 7, 2025 அன்று திருப்பூரில் வேலை செய்தபோது, உடன் வேலை பார்த்த 17 வயது பூர்த்தியடையாத சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பாக மகளிர் போலீசார் கருப்பசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.