சாத்தூர்: தெருநாய்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை....

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை, துலுக்கன்குறிச்சி, கண்டியா புரம், கங்கர்சேவல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி