விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சாலை விபத்து;திருநங்கை உயிரிழப்பு.
சாத்தூரை சேர்ந்த ஆரோக்கியம் ( 51)என்ற திருநங்கை தனக்கு கிடைத்த வேலைகளை செய்து வந்தார். இவர் சாத்தூர் - கோவில்பட்டி நான்கு வழி சாலையில் சின்னஓடைப்பட்டி விலக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.