விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் தெருநாய்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்து, சாலையில் செல்வோர் மற்றும் குழந்தைகளை கடித்து குதறுகின்றன. மேலும், வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தொல்லை தரும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.