சாத்தூர்: சாலை விபத்தில் தொழிலாளி பலி

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த தாயில்பட்டி ஊராட்சி அண்ணாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35). இவர் சிவகாசியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக மண்குண்டாம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது தாயில்பட்டி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கோடங்கிபட்டியை சேர்ந்த மணிகண்டனை (46) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி