சாத்தூர்: விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை..

1பார்த்தது
சாத்தூர்: விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை..
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நல்லமுத்தன்பட்டியைச் சேர்ந்த கவுதம் (20) என்ற இளைஞர், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் வேலை செய்து வந்த கவுதம், சொந்த ஊருக்கு வந்த பிறகு வேலைக்கு திரும்ப செல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி